கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்..!!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கை கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
கடந்த 8- ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி காவல்துறை இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் தொலைபேசி, செல்போன் டவர் போன்றவற்றை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும் என கேட்டு வாதாடினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்காதர் வழக்கை நவம்பர் 24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..