அக்டோபர் 20 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 8 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடா்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக். 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது