கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்திலிருந்த 500 மட்டும் 1000 ருபாய் நோட்டுகளை ஒன்றிய அரசு அதிரடியாக திரும்ப பெற்றது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2016ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் ஒரே இரவில் 10 லட்சம் கோடி ஒன்றிய அரசால் திரும்ப பெறபட்டது. இதனால் நாடு முழுவதும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். நாட்டில் இருக்கும் அனைத்து ஏடீஎம் மையம்களில் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 58 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் கடந்த 6 வருடமாக விசாரிக்கபட்ட நிலையில் நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் பண மதிப்பிழப்பு செல்லும் என்றும் அது தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து நீதிபதிகள் பேசுகையில், பொருளாதாரம் சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சட்ட விதி எண் 26(2)ன் படி ரூபாய் நோட்டுக்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் உண்டு என்றும் கூறிய நீதிபதிகள், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்தனர்.
இருப்பினும், 4 பேர் கொண்ட நீதிபதி அமர்வில் இருந்த நீதிபதி நாகரத்தினா மாறுபட்ட கருத்தை தெரிவித்தார் அதில், ஒன்றிய அரசின் இந்த முடிவு நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பிறகே அமல்படுத்தியிருக்கவேண்டும். நாட்டின் மறு உருவமாக திகழும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் இவ்வளவு முக்கியமான விஷயத்தில் நாடாளுமன்றத்தை புறக்கணித்திருக்க கூடாது. நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துடன் பணமதிப்பிழப்பு வழக்கிற்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.