டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ரூபாய் 10 லட்சம் செலுத்துவதோடு, தனது பாஸ்போர்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியிருக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..