“குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா..” குஷியில் திருவண்ணாமலை மக்கள்..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்காவது நாளாக, பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தினசரி இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்து வருகிறதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பகலில் கடன் வெப்பத்துடன் வெயில் வாட்டி வரும் நிழலில் தினசரி இரவு பெய்து வரும் மழையால் குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.
அதிகபட்சமாக ஆரணியில் 72 மில்லிமீட்டர் மழையும் ஜமுனாமத்தூர் பகுதியில் 51.8 மில்லிமீட்டர் மழையும் மாவட்டம் முழுவதிலும் 423 மில்லிமீட்டர் மழையும், சராசரியாக 35.28 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக நீர் பெருக்கு எடுத்து ஓடுவதால்.. அவை அருவி போல காட்சி அளிக்கிறது..
இதைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வந்து கண்டு மகிழ்ந்துசெல்கின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..