விமானியின் திறமையால் தான் நான் உயிர் பிழைத்தேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் தனி விமானம் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட போது கடந்த சனிக்கிழமைக்கு பின்னர் மீண்டும் நேற்று 2வது முறையாக விமான விபத்திலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய அவர், “திடீரென்று என் விமானத்தின் முன்னால் இன்னொரு விமானம் வந்தது. விமானியின் திறமையால்தான் நான் உயிர் பிழைத்தேன், திடீரென விமானம் 6,000 அடி கீழே இறங்கியது .
எனக்கு முதுகு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது. எனக்கு இன்னும் வலி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.