உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் குறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
தற்போது, உக்ரைனின் போர் சூழல் காரணமாக சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் குறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.