“மகள் என்று பாராமல் அத்துமீறிய சித்தப்பா…” போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!
போகி பண்டிகையன்று மகளைப் பார்க்க வந்த மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரின் அண்ணன் மகள் சற்று மனநலம் பாதிக்க பட்டவர் என கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம்போகி பண்டிகை அன்று தனது அண்ணன் குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளியே அழைத்து செல்வதாக கூறீ, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். அதன் பின்னர், அச்சிறுமியை அழைத்து வந்து வீட்டில் விட்டு புறப்பட்டு சென்றுள்ளார், அதன் பின்னர் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செங்கம் களிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மகளை அழைத்து வந்து புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்தியமத்திய சிறையில் அடைத்தனர். தனது மகளை பார்க்க வந்த அண்ணன் மகளை கற்பழித்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..