திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் டிக்கெட்டுகள் குறைப்பு..!! அதிர்ச்சியில் பக்தர்கள்..!!
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு 35 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் சுற்றுலாவாக செல்லும் இந்த பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தமிழ் வரைபடம், உணவு, பாதுகாப்பு அறை, சிறப்பு தரிசனம் டிக்கெட், லட்டு பிரசாதம் டிக்கெட், முடி காணிக்கை டிக்கெட் என அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
மேலும் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம், கோயம்பேடு ரோகிணி திரை அரங்கம், பூந்தமல்லி, திருப்பதி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் வசதியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பல சொகுசு ஏசி பேருந்துகள், ஏசி பேருந்துகள், பேருந்துகள் என இயக்கப்பட்டுள்ளது.மதுரை கோவையில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழக சுற்றுலாவளர்ச்சி துறைக்கு தினமும் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கியது. தற்போது சிறப்பு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சில முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முக்கிய பிரமுகர் களுக்கென்று வழங்கப்படும் 1000 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் குறைக்கப்பட்டு தற்போது 400 டிக்கெட்டுகள் வழங்கப் பட்டுள்ளது.
இதனால் 400 பேர் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த டிக்கெட் குறைப்புகள் தாற்காலிகம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பே முன்பதிவு களும் நிறைவடைந்துள்ளது, என்பது குறிப்பிட தக்கது.
-வெ.லோகேஸ்வரி