குழந்தைகளுக்கு தினமும் டைப்பர் உபயோகிப்பதால்.., ஏற்படும் விளைவு..!!
குழந்தை பிறந்த பின் அவர்களின், பராமரிப்பு பற்றி தாயமார்கள் அனைவருக்கும், பல சந்தேகங்கள் இருக்கும்.
அதில் ஒன்று தினமும் டைபர் உபயோக்கிலாமா..? அப்படி உபயோகித்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா..? என்பது தான்.
உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.., குழந்தைகள் நல மருத்துவர் அனிதா.
தினமும் குழந்தைக்கு டைப்பர் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.
காரணம் தினமும் டைப்பர் உபயோகிக்கும் பொழுது குழந்தையின் பின் சருமம் அதிகம் பாதிக்கப் படுகிறது.
தினமும் டைப்பர் உபயோகிக்கும் பொழுது, குழந்தைக்கு சிறுநீர் மற்றும் மோஷன் கழித்த பின், அதனுடன் இருப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
அவர்களை ப்ஃரீயாக மோஷன் கழிக்க விட செய்ய வேண்டும்.
வெளியே குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது, டைப்பர் உபயோகிக்கலாம்.
அதுவும் அவ்வப்போது அவர்கள் சிறுநீர் ஏதேனும் கழித்து விட்டால், டைப்பர் மாற்றி விட வேண்டும்.
இரவில் உறங்கும் பொழுது போடலாம், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, டைப்பர் மாற்றி விட வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தை குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள, தினமும் படித்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி