தீபம் எப்படி ஏற்றனும் தெரியுமா???
தாமரை நூல் திரி கொண்டு தீபம் ஏற்றுவது நமது வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யும்.
குழந்தைகள் கொடுக்கும் தொல்லைகள் குறையும்.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், இரண்டாவது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரண்டு திரியும் ஏற்ற வேண்டும்.“தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது”
தீபத்தை குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரியையும், இரண்டாவது வடக்கே உள்ள திரியையும், 3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.
“ஊதி அணைக்க கூடாது”
மேற்குறிப்பிட்டபடி, 8 நாட்களுக்கு அன்றாடம் 1 மணி நேரம் வீதம் பசுநெய் கொண்டு தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யும்.
“”குத்துவிளக்காகிய குடும்பப்பெண்””
Discussion about this post