பேருந்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! பரபரப்பான தஞ்சை..!!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்த பெண் ஒருவர் வேலைகள் முடித்து விட்டு அன்று இரவு பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த பெண்ணை பைக்கில் ஏறும் படி மிரட்டியுள்ளனர்..
ஆனால் அந்த பெண் அதனை மறுத்துள்ளார்.. பின் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மிரட்டி அழைத்து சென்று பிரவின் (வயது 32) ராஜ்கபூர் (வயது 24) இரண்டு பெரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்..
நீண்ட நேரம் ஆகியும் அப்பெண் வீட்டிற்கு வராததால் பரிதவித்த உறவினர்கள் பெண்ணை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.. அப்போது பூதலூர் காவலர்களுக்கு ஒரு பெண் பூதலூர் பேருந்து நிலையத்திற்கு பின் உள்ள சாலையில் ஒரு பெண் ஆடையின்றி ரத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடதிற்கு சென்ற போது அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.. அதன் பின் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய பிரவின் மற்றும் ராஜ்கபூர் ஆகிய இருவரையும் காவலர்கள் தேடி வருகின்றனர்.. இந்த சம்பவம் பூதலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..