சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைகள் சரிந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க பொதுமக்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கொரோனா மற்றும் உக்ரைன் ரசியா போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. மேலும் விலைவாசியும் உயர்ந்து பல நாடுகளுக்கு பேரடியாக அமைந்தது. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை வேகமாக உயர்ந்தது. 2014ம் ஆண்டுக்கு பின் இந்தளவு கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100 எட்டியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து ஒன்றிய அரசு கலால் வரியில் லிட்டருக்கு ரூ 9-உம் டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ 7.50-உம் குறைத்தது இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 129 டாலராக இருந்து இபொழுது 50 டாலர்கள் குறைக்கப்பட்டு 76 டாலருக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கடந்த 200 நாட்களாக எரிபொருளின் விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த போதிலும் ஒன்றிய அரசு விலையை குறைக்காமல் இருப்பது பொதுமக்களுக்கு செய்யும் வஞ்சனை செயல் என்று பொதுமக்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் ஒன்றிய அரசினை வலியுறுத்தி வருகின்றனர்.