பிரபல நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனரான சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத்தில் நடித்ததை நியாயப்படுத்தும் வகையில் விளக்கமளித்துள்ளார்.
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய சரத்குமார், சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி சேரர்பில் பூர்ண மது விலக்கு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ரம்மி விளையாட்டு அறிவுபூர்வமான விளையாட்டு அதை விளையாடுவதற்கு திறமை வேண்டும், குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்பவர்களை ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று கூறுகிறார்கள் என்றும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பதற்கு முன்பே தான் அந்த விளம்பிரத்தில் நடித்துவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சரத்குமார் சொல்வதால் தான் ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்களா? என்றும் அவ்வாறு பார்த்தால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்றும் தான் கேட்கிறேன் ஆனால், மக்கள் எனக்கு ஓட்டு போடுவதில்லை என்று ஆன்லைன் ரம்மி குறித்தான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.