விமர்சிக்க வேண்டிய விசயத்தை விமர்சிக்கலாமே..!!
ஒரு படம் திரைக்கு வருகிறது.. என்றால் படத்தின் முதல் ஷோ திரையிடப்பட்ட பின் அதை பற்றி ரசிகர்களிடம் கேட்பதும்.. படத்தின் கதை என்னவென்று அதை பற்றி பேசுவதும் வழக்கமான ஒன்று.. ஆனால் இந்தப் படத்தை பார்த்த பலரும் படத்தை பற்றி விமர்சனம் செய்ததைவிட அமைச்சரை விமரசனம் செய்து வருகிறார்கள்.
நான் பல முறை அமைச்சரை சந்தித்தவன் என்ற வகையில் சொல்கிறேன். அமைச்சர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருக்கும் நாளில் யார் சென்றாலும் அமைச்சரை சந்திக்கலாம், மனு கொடுக்கலாம். அதனை மறுக்காமல் வாங்கி கொள்வது அவரது வழக்கம்.. கடமைக்கு என்று மட்டும் அதை வாங்கிகொள்ளாமல் நாம் வைக்கும் கோரிக்கை குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள செய்வார்…
வந்திருப்பவர் யார் என்றெல்லாம் பார்த்து அவர் சந்திப்பதில்லை. முன் அனுமதி பெற்று தான் சந்திக்க வேண்டும் என்பதும் இல்லை. அதேபோல் அமைச்சரை யார் யார் சந்திக்கிறார்களோ அதை அனைத்தையும் அவர்களே புகைப்படம் எடுத்து அதற்கென உள்ள முகநூல் பக்கத்தில் அவர்களே பதிவிடுவார்கள்.
வேறு எந்த அமைச்சரும் தனது வீட்டில் தினமும் பார்வையாளர்களை சந்திப்பதில்லை. விமர்சிக்க வேண்டிய விசயத்தை மட்டும் விமர்சிக்கலாம். குறிப்பிட்ட அந்த நிகழ்வு அமைச்சரின் அனுமதியோடு நடந்திருந்தால் அதை விமர்சிக்கலாம். யார் அதற்கு காரணமானவர்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மறுபக்கம் அரசு பள்ளி விவகாரம்.. அரசு பள்ளியில் ஒருவர் ஆன்மீகம் குறித்து பேசியதற்கு பள்ளி நிர்வாகமோ அவரை அனுமதித்த தலைமை ஆசிரியரே பொறுப்பாவர்.. ஆனால் இதில் கூட அமைச்சரையே குற்றம் சாட்ட வேண்டுமா..? அரசு தரப்பில் இருந்து இதுபோன்ற நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்தக் கூடாது என்ற அறிவிப்பு கொடுத்துள்ளது. இனியாவது நாம் பேசுவது சரியா என்பதை விட அதற்கு காரணம் யார்..? அப்படி நடக்க காரணம் என்ன..? என்பதை தெரிந்துக்கொண்டு பேச வேண்டும்…