“கிரிக்கெட் வீரர் டூ நடிகர்” விஷ்ணு விஷால் கடந்து வந்த பாதை..
சில நடிகர்கள் நல்ல படங்கள் நடித்திருந்தாலும் அந்த குறிப்பிட்ட காலத்தில் கொண்டாடுவார்கள், அந்தவகைகயில் நிறைய நல்ல படங்களை நமக்கு தந்தவர். இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றினார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக கிரிக்கட் ஆடியவர்.
அதன் பின்பு சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய வாழ்கை இவர் நடித்த சினிமா மாதிரி தான், இவருடைய தந்தை தமிழ்நாடு காவல் உயர் அதிகாரியாக இருந்தவர். இவர் கிரிக்கெட் வீரராக இருந்தவர்.., அதேயே போல் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் அதில் போலீஸ் வேலைக்கு செல்வதற்கான படமாக இருக்கும்.
ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராக இருப்பவர் எங்கோயோ கேட்ட கதைகள் போல் இருந்தாலும், இவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வினை படமாக்க பட்டது என்பது உண்மையே. இவருக்கு முதன் முதலில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அதற்க்கு பல மாதங்களாக தயாராகி கொண்டிருந்தார்,
அவருடைய கடின உழைப்பு இன்று வரை அவர் நிறைய நல்ல படங்கள் அமைவதற்கு முதல் படியாக அமைத்தது விட்டது. திருமண வாழ்வில் சில கசப்பான நினைவுகள் இருந்தாலும் அதை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறார் இன்று வரை. இன்றைக்கு அவர் பூமியில் வந்த முதல்நாள் விஷ்ணு விஷால் பிறந்தநாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கிராமங்களில் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது திருவிழாக்கள் தான். அந்த திருவிழாவில் தான் சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விழாக்கோலமாக கொண்டாடுவார்கள். அத்தை பொண்ணு சொந்தகார பொண்ணு என பலரின் காதலுக்கும் வழிவகையாக இருக்கும், முதன் முதலில் பார்க்கும்பொழுது காதல் பிறக்கின்றது இசையமைப்பாளர் வி. செல்வகணேஷ், பாடகர்கள் கார்த்திக்,சின்மயி பாடிய பாடல்.
லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல……
தவறான போன் அழைப்பினில் தொடங்குகின்ற காதல், இது என்ன ஒரு புது விதமான சொந்தமாக எனக்கு கிடைத்தாய்,உன்கூட இருக்கும் இந்த பொன்னான நேரங்கள் வாழ்கை முழுவதும் வேணும் என்று நினைக்கிறது.இசையமைப்பாளர் வி. செல்வகணேஷ் பாடகர் கார்த்திக்,சின்மயி சேர்ந்து பாடினார்.
விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்..
இந்த படம் இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம்,ஒரு குடிகாரனாக இருந்த ஒருவரை திருத்தி ஒரு மனிதனாக மாறும் ஹீரோ. கடலுக்கு சென்ற ஹீரோவை காணாமல் தவிக்கும் மனைவி பலநாள் கழித்து இறந்து வரும் கணவனை பார்த்து அழுகின்ற மனைவி, கணவனை நினைத்து வாழும் மனைவி இசைமைமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையில் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல். கடலுக்கு சென்ற தன்னுடைய காதலன் நிலைமை என்னவென்று தெரியாமல் தவிக்கிறேன் நிலைமையை கேட்டு சொல்ல கொக்கும், நாரைக்கும் கண் அலைந்து கொண்டு இருக்கிறது.
பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே…..
ஒரு படம் ஒரு கேமராவில் ஆரம்பிக்கும் அதயே கதையாக நடித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம், அந்த காலங்களில் கிராமப்புறங்களில் போட்டோ எடுத்து வைக்க மாட்டார்கள் ஏன் என்றால் ஆயுசு கொறஞ்சிரு அப்படினு சொல்லுவாங்க அதையே கதையாக வடிவமைத்து வந்ததுதான் இந்த திரைப்படம்.
என் காதல் கனவு இப்படியே முடிந்து விட கூடாது, ஆசை எல்லாம் ஒழுச்சி வைத்து நீ மறைந்திட கூடாது. இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் பாடகர்கள் பிரதீப் குமார், கல்யாணி நாயர் பாடிய பாடல் இது.
காதல் கனவே
தள்ளிப் போகாதே
போகாதே ஆச மறச்சு
நீ ஒளியாதே ஓடாதே….
இவர் இன்னு நிறைய படங்களில் நடித்து மக்களை என்டர்டைன்மெண்ட் பண்ணுவாரு.மதிமுகம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால் சார்.
– சரஸ்வதி