சீறிப்பாய்ந்த GSAT-N2..!! எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்..!! இதில் இவ்ளோ விஷயம் இருக்கா..?
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இஸ்ரோவின் GSAT-N2 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..
டிஆர்டிஓ ஆய்வகம் ஏவுகணைகளை உள்நாட்டில் தயார் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் 1,500 கி.மீ தொலை தூரத்தில் இருந்து தாக்கும் ஹைபர் சோனிக் ஏவுகணையை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை மையத்தில் டிஆர்டிஓ ஆய்வகம் உருவாக்கியுள்ளது.
இந்த ஏவுகணைகளை நேற்று முன்தினம் ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படைகளின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட டிஆர்டிஓ-வை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
அதனை தொடர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதிகாலை 12.01 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 என்கிற ராக்கெட் மூலம் 4700 கிலோ எடை கொண்ட GSAT-N2 என்கிற செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது..
இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக மேலாளருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ், ஜிசாட்-என் 2 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தார்.
இஸ்ரோவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இடையே வர்த்தக ரீதியில் இச்செயற்கைக்கோள் ஏவப்படதாக விண்வெளி ஆய்வறிஞ்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..