COVID 19 is increasing in Karnataka
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை.
சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்; கர்நாடகாவில் 84 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரத்தை வைத்து பள்ளிகள் திறப்பது பற்றி உறுதியான முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றார். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் கர்நாடகா மாநிலம் முழுவதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. COVID 19 is increasing in Karnataka