பாகிஸ்தானுடன் நடந்த 3 நாள்கள் போரில் பிரமோஸ் ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் பல இலக்குகளை துல்லியமாக தாக்கியது. இதனால், உலக நாடுகள் மத்தியில் பிரமோஸ் ஏவுகணையின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். தரை, ஆகாயம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து இதை ஏவ முடியும். பிரோமோஸ் ஏவுகணையை இடை மறித்து தாக்கவோ, நிறுத்துவதோ முடியாத காரியம்.
தற்போது, இந்த ஏவுகணையை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் 357 மில்லியன் மதிப்புக்கு பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வியட்நாம், மலேசிய நாடுகளும் இந்த ஏவுகணையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. எகிப்து, அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் , சிலி, பிரேசில், அர்ஜென்டினா, வெனிசூலா போன்ற நாடுகள் பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.