இந்தியாவில் 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி நாளை மறுநாள்(மார்ச்.16) முதல் தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் (மார்ச்.16) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
அதேபோல், 60-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Discussion about this post