எனது முன்னாள் மனைவி அவளுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும் என டி.இமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை வென்றார்.
இதற்கிடையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இமான் மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் இமான் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த உமா என்பரை இமான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட்டில் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் டி.இமான் அளித்த பேட்டி ஒன்றில் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து பேசியுள்ளார். அதில், ” விவாகரத்து என்பது மிகப்பெரிய விஷயம். விவாகரத்து என்றால் ஆண் மீதுதான் குற்றம் என மொத்தமாக குற்றம் சாட்டுகிறார்கள். தவறு யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம் அதை கோபமாகவும் பேசலாம் பேசாமலும் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருவர் மீது பழி போடக்கூடாது.
நானும் இப்படித்தான் நடக்க கூடாது என்று தன் விரும்பினேன் என்னுடைய குழந்தைகள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கக் கூடாது என நான் ஒரு அப்பாவாக நினைக்கிறேன்.
என் குழந்தைகள் மீது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும் என் உயிர் மூச்சு இருக்கும் வரை அது ஒரு நாளும் மாறாது என தெரிவித்துள்ளார். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் “, என தெரிவித்துள்ளார்.
Discussion about this post