தேர்தலுக்கு ஊர் போறீங்களா..? அதிர்ச்சியில் பயணிகள்.!! மீண்டும் இதே சிக்கலா..?
வருகின்ற லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால்.., வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக சொந்த மாவட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
அதற்காக கூடுதல் பேருந்து மற்றும் இரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.., ஒரு சில பயணிகள் தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் செல்வதற்காக இப்போதில் இருந்து டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளனர்.., ஆனால் தற்போது ஆம்னி பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளின் பயணசீட்டு கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கண்டனம் விடுத்துள்ளது.
இருப்பினும் தற்போது தேர்தலில் வாக்களிப்பதற்காக நம் மதிமுகம் நிபுணர் டிக்கெட் புக்கிங் செய்த போது பேருந்தின் பயணசீட்டின் கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
சென்னை டூ திருச்சிக்கு 18ம் தேதி இரவு புக்கிங் செய்தபோது காண்பித்த டிக்கெட் விலை 1499, 1800, 1608, 1699 ரூபாய் என எல்லாமே 1500 ரூபாய்க்கு மேல் பயணசீட்டின் விலை உள்ளது.
அதேபோல் அரசு பேரூந்துகளில் பேருந்து கட்டணம் விலை அதே இருந்தாலும் ஆனால் இருக்கைகள் இல்லை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..