அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
வரும் 2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது சமீபத்தில் அக்கட்சியின் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே அதிக வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இந்நிலையில் கட்சியில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேதலைமையில் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலின் வியூகங்கள் மற்றும் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.