தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.கொளத்தூறில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், அங்கு இருந்த மாணவர்களுடன் பேட்மின்டன் விளையாடி மகிழ்ந்தார்.
கொளத்தூர் தொகுதியில், தீட்டி தோட்டத்தில் முதல் தெருவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 33 பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருக்கும் மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் கடும் பணிகளையும் தொடங்கி வைத்து மேலும் வீனஸ் நகரில் கட்டப்பட்ட மாணவர் விடுதியை திறந்து வைத்தார். பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேட்மின்டன் விளையாட்டு அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அங்கு இருந்த மாணவர்களுடன் பேட்மிண்டன் ஆடி மகிழ்ந்தார். பிறகு பந்தர் கார்டன் பள்ளியில் ரூ.4.37 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள, மறுசீரமைப்பு மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்தும் சீறமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.