காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய 201 கோடி ரூபாய் வரியை காங்கிரஸ் கட்சி செலுத்தாததால் அக்கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரசின் வங்கிக்கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.
கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமுடியாத சூழ்நிலை உருவாகும் என்று காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் வங்கி கணக்குகளை பயன்படுத்த எந்த கட்டுப்பாடும் கிடையாது எனவும் வருமானவரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு வரும் 21 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என்று வழக்கை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என்றும், சர்வாதிகாரத்தின் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை, தலைவணங்கவும் மாட்டோம் என பதிவிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதல் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே தங்களது கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலமாக ஜனநாயகமும் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.