கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 வழங்கும் ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த முக்கிய 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார்.
இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.