கோவையில் பிரம்மாண்ட செலவில் திறக்கப்பட்ட அதுல்யா சீனியர் கேர் மையம்..!! இதில் இத்தனை சிறப்பு அம்சங்களா..?
கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில், அதுல்யா சீனியர் கேர் மையம் எனும் மையத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில்ஸ் பகுதியில், அதுல்யா சீனியர் கேர் மையம் என்ற பெயரில் மூத்தகுடிமக்களுக்கானப்ரீமியம் குடியிருப்பு வளாகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது இதன் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர், பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர், பிரதாப் ஆகியோர் அதுல்யாசீனியர்கேர்மையத்தைரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
விழாவில் கோவை அதுல்யாசீனியர்கேர்நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திக் நாராயணன், தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினர்,
பின்னர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 70,000 சதுர அடி என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கோவையின் இந்த புதிய அதுல்யா சீனியர் கேர் வளாகம், வயது முதிர்ந்த நபர்களுக்கு உயர்தர பராமரிப்பையும், சௌகரியத்தையும் வழங்குவதில் அதுல்யா கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு நேர்த்தியான சாட்சியமாக திகழ்கிறது.
கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர். பிரதாப்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த வளாகதொடக்கவிழாநிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த வளாகத்தில் மொத்தத்தில் 100 படுக்கை வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன, குடியிருப்பாளர் களுக்கு விசாலமான மற்றும் சௌகரியமான வாழ்விட வசதியை வழங்கும் வகையில் இது ஒவ்வொன்றும் மிக கவனத்தோடும், நேர்த்தியோடும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
நாம் வசிக்கும் அமைவிடம் நம்முடையது என்ற உணர்வையும், அந்தரங்க பாதுகாப்பையும் மற்றும் நம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற சூழலையும் பேணி வளர்க்கும் நோக்கத்தோடு இவ்வளாகத்தில் உள்ள ஒவ்வொரு அமைவிட வசதியும் மிக கவனமாக உருவாக்கப் பட்டிருக்கிறது.
மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத இரு பிரிவுகள் உட்பட, மொத்தத்தில் ஏறக்குறைய 200 பணியாளர்கள் அடங்கிய குழு, அதுல்யா சீனியர்கேர் வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு, அதுவும் குறிப்பாக முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும், கனிவுள்ள தோழமை உணர்வும் கிடைப்பதை சிறப்பான, பயிற்சியளிக்கப் பட்ட இப்பணியாளர்கள் குழு உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post