கொடைக்கானல் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! அமைச்சர் பொன்முடி கொடுத்த வாக்கு..!!
கொடைக்கானல் மலை கிராமத்தில் விரைவில் ஆண்களுக்கான அரசு கலைக் கல்லூரி துவங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவானது இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார் .
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சி முடிந்ததும். அப்பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
பின் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மேலும் பெண்களுக்கான அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதாகவும் ஆண்களுக்கான கலைக் கல்லூரி விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக மாணவிகள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர் .
Discussion about this post