மருமகன் மாமனார் இடையே மோதல்..!! விபரீதத்தில் முடிந்த சர்ச்சை..!!
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது…
திருப்பூர் மாவட்டம் காங்கேத்தை அடுத்த எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 70) விவசாயம் செய்து வருகிறார். பழனிசாமியின் மகள் அம்பிகா., இவருடைய கணவர் ராஜ்குமார். ராஜ்குமார் படியூர் அருகே ஹாலோபிளாக் கம்பனி நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக பழனிசாமிக்கும்., ராஜ்குமாருக்கும் சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இரு குடும்பங்களும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை ராஜ்குமார் பழனிச்சாமி வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பழனிச்சாமியை ஐந்து முறை சுற்றுள்ளார் இதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்..
இதனை அறிந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றவர் படியூர் பகுதியில் தன்னை தானே நெத்தியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
இதுகுறித்து காவலர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.. இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகனை மாமனாரே சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..