அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும். இதில் இந்தியா ராணுவத்தினர் சீன ராணுவத்தை பின் வாங்க வைத்துள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்ஏசி எனும் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 300 சீன ராணுவ படையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைய முயற்ச்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து சீன படையினரை இந்தியா ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்த்துள்ளனர். இதனால் சீன ராணுவம் அந்த பகுதியிலிருந்து பின் வாங்கியுள்ளது.
அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இது குறித்து இந்த மோதலில் இந்தியாவை விட சீன வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாவும், ராணுவ வீரர்கள் தயாராக இருந்ததால் தாக்குதலை சமாளிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நம் இந்தியா ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை, தைரியமாக தடுத்து நிறுத்தி அவர்களை பின்வாங்க வைத்துள்ளனர் இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, வீரர்கள் யாருக்கும் தீவிர காயமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்,