டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!! பெரும்பான்மையை நிரூபிக்கும் அதிஷி..!!
டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள அதிஷி.. சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்..
கடந்த ஆண்டு டெல்லி மதுபானகொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முன்னாள் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட்டது.. நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது…
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில்.. கடந்த 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் 2023 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்..
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட..,. முதலில் தேர்தலையோட்டி இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன் பின் அமலாக்கதுறை சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை மக்கள் நம்பும் வரை முதல்வராக பணி புரிய போவதில்லை எனக்கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.. அதன் பின்னர் தற்போதைய முதல்வராக ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த அதிஷி தேர்வு செய்யப்பட்டார்…
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறவுள்ள சட்டபேரவையில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. இதனால் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என சொல்லப்படுகிறது.
இந்த பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், டெல்லியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக குளிர் காலத்தில் ஏற்படும் காற்று மாசை தடுப்பது குறித்த செயல்திட்டம் விவாதிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்படும் என சொல்லப்படுகிறது…
ஒவ்வொரு முறையும் டெல்லியில் பருவநிலை மாறும் போது குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.. அதனை தடுக்கும் விதமாக 21 அம்சங்களை கொண்ட செயல்திட்டம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.. இதுபற்றி இன்று விவாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..