* நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் காலம் தாழ்த்தாமல் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர் *
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராதிகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,
திரைப்பட நடிகை விஜயலட்சுமி தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தது குறித்தும் விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புகார் அளித்திருக்கிறோம். ஒரு அரசியல் கட்சி தலைவராக புது மேடைகளில் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார். ஆனால் விஜயலட்சுமி பற்றி கேட்டால் போதும் அவரை அவதூறாக பேசுகிறார். இது ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் இது போன்ற பேசலாமா?
தொடர்ந்து விஜயலட்சுமி சீமானின் மீது பல புகார்கள் கொடுத்தாலும் காவல்துறையினர் அரசியல் கட்சி தலைவர் என்பதால் அவரின் மீது நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டவில்லை. மேலும் காலம் தாழ்த்தாமல் சீமானின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைப்போல் ஓ.பி ரவீந்திரநாத் MP மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தாமாகவே முன்வந்து புகார்களை அளிக்கும் என அவர் தெரிவித்தார்.