தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக அமைச்சர் உதயநிதி இருக்கிறார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சனாதன பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறியதாவது:
தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம், இந்தியாவுக்கே எரி நட்சத்திரமாக உதயநிதி விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலினை விட உதயநிதியின் அரசியல் வீச்சு உயர்ந்து நிற்கப்போகிறது என்றும் அவர் கூறினார்.
அதற்கான காலம் வரும், அந்த காட்சியை நான் இருந்து பார்ப்பேன் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.