அரண்மையில் நாட்டு ராஜாவிற்கு போட்டி..?
ஒரு அழகான நாட்டுக்கு ராஜாவாக இருந்தார் சட்டு அவருக்கு கீழ் பல அமைசர்கள் நாட்டை ஆள உதவி செய்தனர்.., ராஜாவிற்கு மொத்தம் மூன்று மகன்கள்.
ராஜாவிற்கு ஆட்சியில் இருந்து சிறிது காலம் ஓய்வு வேண்டும் என்பதற்காக மகன்களிடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார்.
எனவே மூன்று மகன்களையும் கூப்பிட்டு.., உங்கள் மூவருக்கும் நான் ஒரு போட்டி வைக்க போகிறேன் அதில் யார் ஜெய் கின்றார்களோ அவர்கள் இந்த நாட்டின் இளவரசர் என கூறினார்.
போட்டி என்னவென்றால் ” மக்களுக்கு என்றும் தேவைப்படும் ஒன்றை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நாட்டின் இளவரசர் என கூறினார். மறுநாள் காலை
மூத்த மகன் : டின்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் உடையும்.., இருக்க சிறந்த இடமும் அமைத்துக்கொடுக்கிறான்.
இரண்டாவது மகன் : பின்டு, உணவும் மற்ற தேவைகளுக்கு தேவையான காசும் கொடுக்கிறான்.
மூன்றாவது மகன் : சின்டு, குழந்தைகள் அனைவருக்கும் தேவையான கல்வி கொடுக்கிறான்.
ராஜாவிற்கு ஒரே குழப்பம் .., மூவரும் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்யும் செயலை தான் செய்து இருக்கிறார்கள்.., என்ன செய்வது என்று குளம்பிக் கொண்டே, மூன்று மகன்களையும் அழைத்து இதை நீங்கள் எப்படி செய்திர்கள் என்று கேட்டார்.
மூவரும் ஒன்றாக கலந்து பேசி ஆளுக்கொன்றை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து தான் இதை செய்தோம் என்றார்கள்.
மூவரும் ஒற்றுமையாக இருந்ததால்.., மூன்று பேரையும் ஆட்சி செய்ய வைத்தார்.
“எப்பொழுது ஒற்றுமையாக இருந்தால் வீட்டில், மட்டுமல்ல நாட்டிலும் பல நன்மைகள் நடக்கும்” என்பதே இதன் அர்த்தம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் கதைகள் பற்றி படிக்க.., தினமும் மதிமுகத்துடன் இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி