நடிகர் விஜயின் 30 வருட திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் நேற்று மாலை வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் பரிசு அளித்துள்ளது. அதில் வாரிசு படத்தின் இரண்டாம் பாடலை குறித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.
https://twitter.com/SVC_official/status/1598663284114481154
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை குறித்தான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாரிசு படக்குழு மேலும் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது. நேற்று மதியம் நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்லி ஒரு எடிட்டிங் வீடீயோவை வெளியீட்டுக்கு மாலை வாரிசு படத்தின் அப்டேட் வெளியாகிறது என்று அறிவித்தது.
இதனால சமூக வலைத்தளம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது நேற்று மாலை 6 மணிக்கு மேல் அப்டேட் வெளியானது அதில் தீ தளபதி என்று சதுரங்க ஆட்டத்தில் இருக்கும் கருப்பு ராஜாவை வைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது இது இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகி கொண்டாடபட்டு வருகிறது. மேலும் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று துணிவு படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட் வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.