தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமா தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வந்தது ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தீவிரம் குறைந்தது.
இந்நிலையில் இந்தியா வானியல் ஆய்வு மையம், வங்க கடல் பகுதிகளில் புதிதாக புயல் உருவாகி வருவதால் இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்து வந்த நிலையில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.