கோவையின் புதிய மேயர்..! மேயர் மாற்றத்திற்கு காரணம்..?
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 97 வார்டுகளை திமுக கை பற்றியது.., அதில் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.. அதன்பின் கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்த “செந்தில் பாலாஜி” 19 வது வார்டு உறுப்பினரான “கல்பனா ஆனந்த் குமாரை” மேயராக பரிந்துரை செய்தார் அதனால் திமுக தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக கல்பனாவை வெற்றி பெற செய்தனர்..
அதன் பின் கோவையின் மேயராக “கல்பனா” பொறுப்பேற்றார். ஆனால் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பின் திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே, மூத்த அமைச்சர் கே.என்.நேருவுடனும் மோதல் ஏற்பட்டது, எனவே தனிப்பட்ட காரணங்களை சொல்லி கல்பனா தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை கோவை மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேயர் பதவி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது, கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது..
அதேபோல, கோவை மத்திய மண்டல தலைவராக இருந்த மீனா லோகு, மேற்கு மண்டலத்தின் தலைவராக உள்ள தெய்வானை தமிழ்மறை ஆகியோர் பெயர் பட்டியலும்., பிற மேயர் வேட்பாளர்கள் பெயர் பட்டியலும் வெளியானது. இந்த மேயர் பதவி பிரச்சனையானது ஜாதி பிரச்சனையாக மாறியது.., அதனால் திமுக தலைமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.., அதாவது “மேயர் பதவியில் தேர்வு செய்யப்படுவார் ஒரு ஜாதியினராக இல்லாமல் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், மக்களிடம் அனுசரித்து நடக்கும் தனமையானவர் மட்டுமே மாநகராட்சியை சிறப்பாக வழிநடத்துபவராக இருக்க வேண்டும்.. என அறிவித்துள்ளது.
அதிமுகவை சேர்ந்த வேலுமணி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கோவை மாவட்டத்தை மையமாக வைத்து அரசியல் செய்வதால், அவர்களை எதிர்த்து அரசியல் செய்து 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு சாதகமான முடிவுகளை கொடுக்கும் வகையில் களப்பணியாற்ற வேண்டும். என வலியுறுத்தியுள்ளது.
இந்த முறை மேயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கவுசிலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது., அப்படி அவர்களை தேர்வு செய்யவும் கவுன்சிலர்கள் என பிரச்சனையும் செய்யக்கூடாது.. தேர்தல் நடத்தும் பொறுப்புகள் அமைச்சர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கான தேர்தல் நாளை கோவையில் நடைபெறவுள்ள நிலையில் இன்று காலை கோவையின் புதிய மேயரை அமைச்சர் கே.என். நேரு மற்றும் முத்துசாமி ஆகியோ ர் கவுன்சிலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் புதிய மேயர் திமுக வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..