பணத்திற்காக மகளையே அப்படி செய்த தாய்..! போலீசில் சிக்கியது எப்படி..!
சென்னை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (32). இவரிடம் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இந்தநிலையில் மூன்று வருடங்களாக கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அந்த பெண் தவிர்த்து வந்துள்ளார். இதனால் தனது 16 வயது மகளை முத்துலட்சுமியிடம் வேலைக்கு அனுப்பி கடனை கொடுக்க முடிவு செய்து மகளை அவரிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டுவேலைக்காக அனுப்பி வைத்த 16 வயது சிறுமியை முத்துலட்சுமி வீட்டு வேலை செய்யவிடாமல் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து அதன்மூலம் முத்துலட்சுமி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதனைதொடர்ந்து, திடீரென சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனது தாயிடன் வந்துள்ளார். மகளின் உடல்நலம் சரியானதும் அந்த பெண் சிறுமியை மீண்டும் முத்துலட்சுமி வீட்டுக்கு வேலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி 8 மாதமாக தனது தம்பியுடன் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் அவரை தொடர்பு கொண்டு மீண்டும் முத்துலட்சுமியிடம் வேலைக்கு செல்லுமாறு கட்டாயபடுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி இதுகுறித்து எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ”தனது தாய் வலுக்கட்டாயமாக முத்துலட்சுமி என்பவரிடம் வீட்டு வேலை செய்யும்படி ஒப்படைத்தார். இதன்பிறகு முத்துலட்சுமி, மற்றும் அவருடன் இருந்தவர்கள் தனக்கு போதை பொருட்களை கொடுத்து பலரிடம் உடலுறவில் ஈடுபட வைத்தனர். இதனால் எனது உடல்நிலை மோசம் அடைந்தது. இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியின் தாய், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முத்துலட்சுமி, மற்றும் அவரது கணவர் நிஷாந்த் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவரும் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூற்ப்படும் நிலையில் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்