ஒரே இரவு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்த செம்பரம்பாக்கம் ஏரி.. அதுவும் இவ்வளவு கன அடியா..?
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது..
அதன் படி நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடரந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 577 கன அடியாக அதிகரித்துள்ளது.
3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1441 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக மற்றும் பிற தேவைக்காக வினாடிக்கு 149 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஒரே நாள் இரவில் ஏரிக்கு 377 கன அடி நீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுப்பகுதியில் 80.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்