கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நிலையான இந்தியா 2023 எனும் தேசிய கருத்தரங்கு..!
கோவை பீளமேடு பகுதியில் உள்ள, பி.எஸ்.ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக பேசிய, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி மேலாளர், கோவை மாவட்டம் அதன் நிலைத்தன்மை ஆற்றல் பயிற்சியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, நிலையான இந்தியா 2023 என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த கருத்தரங்கில், தொழில் மற்றும் கல்விதுறை, தொழில் நுட்பம் மற்றும் மக்கள் தொகை உள்ளடக்கிய இயக்கத்தை உருவாக்க உள்ளதாகவும், பேச தொடங்கினார்.
இதில் புதுப்பிக்கதக்க, ஆற்றல் களமாக அமையும் எனவும், சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன், பொருட்கள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கொள்கை கட்டமைப்பு, திறன் மேம்பாடு, மற்றும் பயிற்சி ஆகியவைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனவும் அவர் கூறினார்.
இதில் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை வெளி கொண்டு வருகின்ற மேடையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார், மேலும் இந்த கருத்தரங்கானது இரண்டாம் கட்டமாக ஆகஸ்டு 21, 22ம் தேதி ஹைதராபாதில் உள்ள சைதன்ய பாரதி தொழில் நுட்பகழகத்திலும், மூன்றாம் கட்டமாக, பூனேவில் உள்ள எம்.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் 25, மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், 4ம் கட்டமாக, நொய்டாவில் உள்ள ஜே.எஸ்.எஸ்.தொழில் நுட்ப கல்வி அகாடமியில், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் கூறினர்.
புதுப்பிக்கதக்க எரிசக்தி சூல்நிலையில், தொழில் நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் மூலமாக நிலையான வளர்ச்சி இலக்கு குறித்து புதிய புதிய, அனுபவங்களை வெளி கொண்டு வர ஒரு முயற்சியாக நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியின் செயளாளர் யசோதா தேவி, மற்றும் செபா அமைப்பின் சார்பாக, அணில், கிஷோர்புவராகா, ராஜூராம் அர்ஜூனன், அசோக்குமார் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.