குறைந்தது தக்காளி விலை..! இன்று ஒரு கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா..?
கடந்த சில நாட்களாக நாடெங்கும் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 1 கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தக்காளி விலை மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் தொடர் கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்து தக்காளியின் அத்தியாவசியம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை கிலோ 230 ரூபாய் முதல் 260 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதங்களில் ஆந்திராவில் இருந்து பிற மாநிலங்களுக்கு தக்காளி பரிவர்த்தனை செய்யபட்டு வந்த நிலையில், தற்போது ஆந்திராவிலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் இன்று தக்காளி விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை இருந்து வந்த நிலையில் இன்று அதிக அளவு தக்காளி மார்கெட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதால் தக்காளி விலை குறைந்துள்ளது.., இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று விற்கப்பட்டதை விட இன்று தக்காளி விலை குறைந்து இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 100 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுவதால், தெருவோர கடைகளில் கிலோ 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post