நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 8 டிப்ஸ்…!
-
10 நாட்களுக்கு ஒரு முறை நகம் அதிகமாக வளர்ந்திருந்தால் வெட்ட வேண்டும்.
-
நகத்தின் சதை பகுதியை சிறிது விட்டு நகம் வெட்ட வேண்டும், இல்லையென்றால் அது அதிகபடியான வலியை ஏற்ப்படுத்தும்.
-
நகங்களை வாயால் கடிக்க கூடாது. நகவெட்டியை பயன்படுத்தி தான் வெட்ட வேண்டும்.
-
சாப்பிட்டவுடன் நகத்தின் இடுக்குகளில் சுத்தம் செய்தல் வேண்டும், இல்லையென்றால் இது வயிற்றுத்தொல்லை , வாந்தி, வலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உண்டாக்கும்.
-
காய்கறிகள் மற்றும் கனிகளை அதிகம் உட்கொண்டால் நகங்கள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.
-
இரவில் படுக்கும் முன் கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நீரால் சுத்தம் செய்துவிட்டு பின் உறங்க வேண்டும்.
-
தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி நகங்களை மாய்சர் செய்யலாம், இதனால் நகங்கள் மிருதுவாக இருக்கும்.
-
வீடு மற்றும் பாத்ரூம்களை ரசாயனப் பொருட்களை கொண்டு சுத்தம் செய்யும் போது கைகளில் கையுறையை அணிந்து சுத்தம் செய்தால் நகங்களை பாதுகாக்கலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
