சர்ச்சைக்குரிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்பட்டு விடக்கூடாது. சர்ச்சைக்குரிய திரைப்படம் என்று நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்பு தன்மை இல்லாமல் இருப்பது தான் அந்த விருதுகளை காலம் கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்தி பிடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.