ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உதவித்தொகை திட்டம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நூற்றாண்டில் மகத்தான திட்டமாக மகளிர் உதவித்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அளிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி என ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார்
குடும்பத்தை முன்னேற்ற உழைக்கும் பெண்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Universal basic income என்ற அடிப்படையில் திட்டம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அயல்நாடுகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகள் கல்வி மேம்படும் என்றும் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக இந்த நிதி நிலையில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பேர் பயன் பெறுவார்கள் என மனக்கணக்கு போட்டு வருகிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம், ஆண்டுக்கு 12000 உதவித்தொகை என்பது பெண்களின் வறுமையை ஒழித்து அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வித்திடும்
இந்த திட்டம் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவர் பெண்கள் , கட்டுமான தொழிலில் ஈடுபடும் மகளிர், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் என பல்வேறு இடங்களில் தங்களது விலைமதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.
விரைவில் இந்த திட்டதிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதி திட்டங்களின் மாபெரும் திட்டமாக இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கும். ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த உதவித்தொகை திட்டம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post