நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியவில்லை என்ற வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்த சுசிகரனின் மகன் மகன் குகன். 13 வயதான இவர், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். எப்போதும் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி ப்ரிபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார்.
வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்கமால் செல் போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரண்டு செல்போன்களிலும் நெட் தீர்ந்ததால் விளையாட முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post