“பெண்ணியவாதிகள் என்று நாகரிகம் பேசுகிறோம்” ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்க்க திட்டம்..!! தமிழிசை சௌந்தர் ராஜன் பேட்டி..!!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவைக்கு வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.., அப்போது அவர் பேசியதாவது
பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இந்தியா முழுவதும் ஒரு கோடி பேரை சேர்க்க வேண்டும் என்னும் பணியை தொடங்கி உள்ளோம் எத்தனை புதியவர்கள் வந்தாலும் எங்கள் பணியை நாங்கள் தொடர்வோம்.., செப்டம்பர் 1 ஆம் தேதி பிரதமர் புதிய உறுப்பினராக சேர்கிறார்.. தமிழ்நாட்டில் 2 மடங்காகும் முயற்சியில் உள்ளோம் இதற்காக மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம் என்றார். முருகன் மாநாட்டுக்கு வணக்கம் ஓட்டுகாக எதையும் செய்வோம்.. இதுவும் ஒரு உத்தி என அவர்கள் செய்துள்ளார்..
எங்காவது சிறுபான்மையினர் மாநாடு எங்காவது நடைபெறுமா. தமிழ்நாடு என்றும் ஆன்மிக பூமி தான் அண்ணாவின் தமிழை பின் படிபவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்றுவார்கள் என்றார். பள்ளிகளில் நடைபெறும் பாலியல் பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு, பள்ளிக்கல்வித்துறை ஏதாவது பிரச்சனை நிகழ்ந்த பிறகுதான் செயலாற்றிக் கொண்டிருக்கிறது…
உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி சம்பவம் ஒரு எடுத்து காட்டு. பள்ளி கல்வித்துறையின் வேலை கல்வி மட்டுமல்ல… குழந்தைகளின் பாதுகாப்பும் தான் அதனை செய்ய வேண்டும் என்றார்.. இது குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை இல்லை என்பதை தான் காட்டுகிறது. என்றார். சில குற்றம் சாட்டு வைக்கப்பட்டாலும் அதில் சில பேரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சில பேர் பலியாகி விடுகிறார்கள்..
ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுடன் பெண் ஆசிரியர்கள் மாணவிகளோடும் செல்ல வேண்டும்.. என்பது எனது கருத்து, பெண்ணியவாதிகள் என்று நாகரிகம் பேசுகிறோம் என்று அடிப்படை கலாசாரத்தை குலைத்து வைத்திருந்தார்கள் .. இன்று நாம் பார்க்கும் அத்தனை பிரச்சனைக்கும் அதுதான் காரணம்., இன்று நாம் பழைய கலாசாரத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் இன்று சமுதாயத்தை நம்ப முடியாது… இரு பாலினரும் சேர்ந்து எந்த இடத்திற்கும் செல்லலாம் என்பதை நம்ப முடியாமல் சூழ்நிலை உள்ளது, இந்த நிலையில் கலாச்சாரம் நமது கலாச்சாரமாக மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது என பதில் அளித்தார்.
நடிகர் விஜய் கட்சி கொடி குறித்த கேள்விக்கு அவரது கட்சி கொடியில் யானை உள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் வழக்கு தொடுத்து உள்ளனர்.. இதனை விஜய் சட்ட ரீதியாக அதை எதிர் கொள்ள வேண்டும் என இவ்வாறே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.