திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..!! இப்போவே இதை புக் பண்ணிடுங்க..!!
திருப்பதி ஏலுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்காண பக்தர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் இத்திருமலை அமைந்துள்ளதால் அங்கு வீற்றிருக்கும் பெருமாளை ஏழுமலையான் என்று பக்தர்கள் அழைத்து வருகின்றன.
இக்கோவிலுக்கு பக்தர்களின் அதிக வருகையால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிவிடுகிறது. அதிலும் புரட்டாசி மாதங்களில் இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் மிகமிக அதிகம் என்பதால் சாமி தரிசன் செய்ய 1 நாளுக்கும் மேல் கூட ஆகிவிடும்.
இதனால் பக்தர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதனை கட்டுப்படுதும் விதமாக ஆன்லைன் டிக்கெட் சேவைகளில் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கின்றனர்.
அந்தவகையில் நவம்பர் மாதத்திற்கான 300 டிக்கெட்கான ஆன்லைன் விற்பனை இன்று துவங்கியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையானை நவம்பரில் தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியீட்டுள்ளனர். மேலும் நவம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-பவானி கார்த்திக்