தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகளுடன் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் பருவவதை தடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில்,ஓமைக்ரான் பிஎப்7 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை தீவிரபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.