சென்னை கீழ்பாகத்திலுள்ள அரசு மனநல மருத்துவ காப்பகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதனை தொடர்ந்து கேயில்பாக்கத்திலுள்ள மனநல காப்பகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாணவர்களுக்கான மனநலன் காக்கும் “மனம்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் “மனநல நல்லாதரவு மன்றங்கள்” தொடங்கி வைத்தார். இதனை அடுத்து, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு நிலையத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கீழ்பாகத்திலுள்ள அரசு மனநல காப்பகத்தில் 28 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக ஒரு தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதற்கு முன் 1994ம் ஆண்டு அன்றய முதல்வர் ஜெயலலிதா இந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.