வீராங்கனை வினேஷ் போகத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு..!!
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 6ம் தேதி இரவு நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தத்தில்., பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் அரை இறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன், வினேஷ் போகத் போட்டியிட்டனர்.. இந்தியாவின் சார்பில் போட்டியிட்டார் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே யூஸ்னிலிஸ் நிலை தடுமாறி விழுந்துள்ளார்..
அதனால் அவர் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறினார். அதன் மூலம், வெள்ளிப் பதக்கம் உறுதி செய்ய்யப்பட்டது.
50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்துள்ளது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் ஏதாவது சதி இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அவருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுத்து வருகினறனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கள் இதயத்தை வென்றிருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், வினேஷ், நீங்கள் அனைத்து வகையிலும் உண்மையான சாம்பியன். மன உறுதி, வலிமை, கடந்து வந்த பாதை போன்றவைகளால், இலட்சக்கணக்கான இந்திய பெண்களுக்கு முன்னோடியாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு போட்டியின் தகுநீக்கம் உங்களின் சாதனைகளை மறக்கடிக்காது எனவும் நீங்கள் மக்களின் இதயத்தை வென்று விட்டீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..